close
Choose your channels

அடுத்தடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் செல்வராகவனின் இரண்டு படங்கள்!

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவனின் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்பதும் அவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இயக்குனராக மட்டுமின்றி செல்வராகவன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் முக்கிய வேடத்தில் ‘சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தளபதி விஜய்யுடன் செல்வராகவன் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது நடிப்பில் உருவான ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஏப்ரல் 7 மற்றும் 13 என அடுத்த வாரங்களில் செல்வராகவனின் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.