close
Choose your channels

மமதியிடம் ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றும் செண்ட்ராயன்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஞாயிறு அன்று கமல் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், செண்ட்ராயனிடம் கமல் ஆங்கிலத்தில் பேசி அவரை திணறடித்தார். அன்று முதல் கமலிடம் நல்ல ஆங்கிலத்தில் பேசியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் செண்ட்ராயன் ஆங்கிலம் பழக முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் குடும்பத்தினர் செண்ட்ராயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கின்றனர். குறிப்பாக வைஷ்ணவி, செண்ட்ராயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்ததோடு, இன்று என்ன லஞ்ச் என்று மமதியிடம் ஆங்கிலத்தில் கேளுங்கள் என்று செண்ட்ராயனை உசுப்பேற்றுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் அம்மா-சின்னம்மா போன்று இருக்கும் மும்தாஜ் - மமதி இருவரும் தீவிரமாக ஏதோ ஒரு விஷயத்தை பேசி கொண்டிருக்கும்போது அவர்களிடம் சென்ற செண்ட்ராயன் 'வாட்ஸ் பார் டுடே லஞ்ச்' என்று ஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றுகிறார். இதனால் இருவரும் கடுப்படைகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.