close
Choose your channels

அஜித்தின் 'ஏகே 62' படத்தில் இந்த சீரியல் நடிகையா? குவியும் வாழ்த்துக்கள்..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் ’ஏகே 62’ திரைப்படத்தில் அவரை தவிர இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் சீரியல் நடிகை ஒருவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’ஏகே 62’. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்றும் அதன் பிறகு இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’ஏகே 62’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’யாரடி நீ மோகினி’ உள்பட ஒரு சில சீரியல்கள் நடித்துள்ள சைத்ரா ரெட்டி, ‘ஏகே 62’ படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு அவரது நண்பர்கள் வட்டாரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

’ஏகே 62’ படத்தில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இணைந்தது உண்மைதானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.