close
Choose your channels

திருநங்கையாக மாறுவதற்கு முன் ஷகிலா மகள் நடித்த டிவி சீரியல்: வைரல் புகைப்படம்!

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்த நடிகை ஷகிலா தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருடைய இமேஜ் முற்றிலும் மாறிவிட்டது. அவரை சக போட்டியாளர்களும் சரி கோமாளிகளும் சரி, இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களும் சரி ஷகிலா அம்மா என்றே அழைத்து வருகிறார்கள்

கடந்த வாரம் ஷகிலா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்ச்யில் இருந்து எலிமினேட் ஆனபோது என்னுடைய இமேஜ் முற்றிலும் மாறியதற்கு இந்த நிகழ்ச்சி தான் காரணம் என்றும் அதற்காக இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார்

இந்த நிலையில் ஷகிலா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் மிலா என்ற திருநங்கையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்பதும், அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிலா திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் ஆணாக இருந்தபோது ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளாராம். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.