close
Choose your channels

ஷங்கரின் அதே பிரமாண்டம்.. கலர்புல் காட்சிகள்.. 'கேம் சேஞ்சர்' பாடல் வீடியோ ரிலீஸ்..!

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வரும் நிலையில் சற்றுமுன் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலில் ஷங்கரின் அதே பிரம்மாண்டம் கலர்ஃபுல்லான காட்சிகளை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ராம் சரண் தேஜா, கைரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், நாசர், வைபவ் ரெட்டி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி உள்ள ஷங்கரின் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ராம்சரண் தேஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ’ஜருகண்டி’ என்ற பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் தெலுங்கில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் மெஹந்தி மற்றும் சுனிதி சவுகான் குரலில் உருவாகிய இந்த பாடல் ஒவ்வொரு காட்சியும் கலர்ஃபுல்லாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரமாண்டமான லாங் சாட் காட்சிகள், அற்புதமான செட்டுகள் மற்றும் ராம்சரண் தேஜாவின் டான்ஸ் ஆகியவை கொண்ட இந்த பாடலை பார்த்தவுடன், படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் ஷங்கர் வேற லெவலில் பிரமாண்டமாக ஒரு பாடலை உருவாக்கியுள்ளார் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.