close
Choose your channels

மணிரத்னம்-கார்த்தி படத்தில் இணைந்த மேலும் ஒரு முக்கிய நடிகை

Saturday, July 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பைலட்டாக கார்த்தி நடித்து வரும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் இணைந்தார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகை இணைந்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் பவண்குமார் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'யூ டர்ன்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் தற்போது 'காற்று வெளியிடை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்துவின் பாடல்களில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தை மணிரத்னம் அவர்களில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.