close
Choose your channels

தந்தையின் தோல்வி குறித்து இன்ஸ்டாவில் ஸ்ருதிஹாசன் செய்த பதிவு!

Monday, May 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் சுமார் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி அவரது கட்சி தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கமல்ஹாசனை 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கமல்ஹாசனின் தோல்விக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கமல்ஹாசனின் தோல்வி குறித்து கூறிய போது ’எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட்டை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.