close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் சித்தார்த் கேரக்டர் என்ன?

Friday, January 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்புடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சித்தார்த், கமல்ஹாசனின் மகனாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. 'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில் சந்துரு கேரக்டரின் மகனாக சித்தார்த் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படம் அனிருத் இசையில் லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் எட்டு நாடுகளில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.