close
Choose your channels

சிம்புவின் 'இது நம்ம ஆளு' இசை வெளியீடு எப்போது?

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு-நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பெற இரண்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தீபாவளிக்கு பின் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர் ராஜா, ஸ்ருதிஹாசன் மற்றும் டி.ராஜேந்தர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு பாடலை தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், டிசம்பரில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.