close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு'  ரன்னிங் டைம் இவ்வளவா? சென்சார் சான்றிதழ் தகவல்!

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் பிரம்மாண்டமாக ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது என்பதும் இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், அதாவது 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு இந்த படத்தில் 19 வயது இளைஞர் முதல் 40 வயது நடுத்தர வயது வரையிலான கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், 19 வயது கேரக்டருக்காக அவர் 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் ‘மாநாடு’ படத்திற்கு பின்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ’மாநாடு’ படம் போலவே சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.