close
Choose your channels

'மாநாடு' பாடல்கள், டிரைலர் ரிலீஸ் தேதி!

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 25ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை இந்த படத்தின் பாடல்கள் ரிலீசாக உள்ளதாகவும் இந்த விழாவின்போது இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மாநாடு’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதை அடுத்து இந்த படம் சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.