close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஜோடியாகும் சின்மயி கணவர்! 

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகி சின்மயின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி கணவர் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் கண்ணன் இயக்கிய ஒரு சில படங்களில் டப்பிங் மற்றும் பாடல்களை சின்மயி பாடியுள்ள நிலையில் தற்போது அவரது கணவர் கண்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில்தான் நடிப்பது ராகுல் ரவீந்திரன் கூறியபோது ’இந்த படத்தின் ஒரிஜினல் படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். என்னுடைய கேரக்டர் மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கும். இந்த படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் ஏற்றவாறு உள்ளது என்பதால் இதில் நடிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்

ஏற்கனவே நடிகர் ராகுல் ரவீந்திரன் ’மாஸ்கோவின் காவேரி’ ’விண்மீன்கள்’ ’வணக்கம் சென்னை’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.