close
Choose your channels

பாடகி சின்மயி கர்ப்பமா? திருமண புகைப்படத்தை வெளியிட்டு அளித்த விளக்கம்

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த செய்திக்கு விளக்கமளித்து சின்மயி தனது சமூக நல பக்கத்தில் கூறியுள்ளார்.

பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளத்தில் சின்மயி ஆக்டிவ்வாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் குடும்ப புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளத்தில் சமூக பிரச்சனைகள் குறித்து மட்டுமே அவர் பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் மிகவும் அரிதாக சமீபத்தில் அவர் தனது குடும்பம் மற்றும் திருமண புகைப்படங்களை பதிவு செய்துள்ளர். இந்நிலையில் இந்த புகைப்படத்தில் சின்மயி மடிசார் சேலை அணிந்திருந்ததால் அவரது வயிறு பெரிதாக இருப்பதாக சுட்டிக்காட்டி அவர் கர்ப்பமாக இருப்பதாக ஒருசிலர் யூடியூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இல்லை என்றும் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் குறிப்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக இப்படி பொய்யான செய்திகளை வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சின்மயி அப்படியே குழந்தை பிறந்தாலும் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர மாட்டேன் என்றும் குழந்தை வளர்ந்த பிறகும் சமூக வலைதளம் பக்கமே செல்ல விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.