close
Choose your channels

'விவேகம்' ரிலீசுக்கு பின்னர் அஜித்-சிவா சந்திப்பில் நடந்தது என்ன?

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கிடைத்துள்ள நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த படம் வெற்றியா? தோல்வியா? என்று இருதரப்பினர் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 'விவேகம்' குறித்த செய்திகளின் பாதிப்புகள் எதுவும் இன்றி அஜித்-சிவா கூட்டணி அடுத்தகட்ட பணியை விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், சமீபத்தில் அஜித் வீட்டிற்கு சிவா சென்றதாகவும், வெகுவிரைவில் இருவரும் மீண்டும் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கிராமத்து கதையம்சம் கொண்ட 'வீரம்', சிட்டி கதையம்சம் கொண்ட 'வேதாளம்', சர்வதேச உளவாளி கதையம்சம் கொண்ட 'விவேகம்' படங்களை அடுத்து, சிவா என்ன கதையை அஜித்துக்காக தேர்வு செய்ய உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.