close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?

Friday, February 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் ரிலீஸ் ஆவதால் ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாறும் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தமிழகத்தில் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது என்பதால் அதே நிறுவனம் தயாரித்த ‘டான்’ திரைப் படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது

இந்த நிலையில் ‘டான்’ திரைப்படம் மே 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. கோடை விடுமுறையில் சரியான நேரத்தில் தான் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.