close
Choose your channels

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்..!

Tuesday, March 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த மேலும் சில விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’அயலான்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.