close
Choose your channels

சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Wednesday, February 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ரஜினிமுருகன்' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படத்தை பாக்யராஜ் கண்ணன் விறுவிறுப்பாக இயக்கி வரும் நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமான நிலையில் இந்த படத்திற்கு 'ரெமோ' என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் ரெமோ என்ற கேரக்டரில் விக்ரம் ரொமாண்டிக்காக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படமும் ரொமான்ஸ் படம் என்பதால் படக்குழுவினர் இந்த டைட்டிலை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.