close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் குறித்த தகவல்

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி தற்போது உண்மையாகியுள்ளது. ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்த புதிய செய்திகளை விரைவில் உங்களுக்கு அறிவிக்க இருக்கின்றோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.