close
Choose your channels

எஸ்.ஜே சூர்யா-ப்ரியா பவானி சங்கர் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday, June 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படத்தில் ஏற்கனவே நடித்த நிலையில் இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நடித்த இன்னொரு திரைப்படம் ’பொம்மை’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராதா மோகன் இயக்கத்தில் உருவாகிய ’பொம்மை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆகி உள்ளன. இருப்பினும் இந்த படம் ரிலீஸ் செய்வதில் சில பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’பொம்மை’ திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரிலீஸ் செய்தியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரொமான்ஸ் மற்றும் திரில் கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் பொம்மை ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.