close
Choose your channels

70 குழந்தைகள் முன்னிலையில் நடுவானில் வெளியான 'வெய்யோன் சில்லி

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ’வெய்யோன் சில்லி’ என்ற பாடல் நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏழை மாணவர்கள் முன்னிலையில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்தபடி சற்று முன்னர் இந்த பாடல் மாணவர்கள் முன்னிலையில் விமானத்தில் வெளியானது.

உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியாவது அதிலும் இதுவரை விமானத்தில் பயணம் செய்யாத 70 ஏழை குழந்தைகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வெளியான ஒரு சில நிமிடத்தில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலர் தின விருந்தாக மெலடி பாடலாக வெளிவந்துள்ள இந்த பாடலை ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடிய இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலின் ஒருசில வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த பாடல் காட்சியின் வீடியோவை பார்க்கும்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.