close
Choose your channels

செளகார்பேட்டை கிளைமாக்ஸில் 50 பேய்கள்

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாக பேய்ப்பட சீசன் கொடிகட்டி பறந்து வருகிறது. டார்லிங், டிமாண்ட்டி காலனி, காஞ்சனா 2, முதல் சமீபத்தில் வெளிவந்த 'மாயா' வரை ஒவ்வொரு படம் வித்தியாசமான கோணங்களில் பேய்க்கதையை கூறி வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் விரைவில் வெளிவரவுள்ள மற்றொரு பேய்ப்படம் 'செளகார்பேட்டை'

பொதுவாக நாம் இதுவரை பார்த்த பேய்ப்படங்கள் அனைத்திலும் இரவில்தான் பேய் வருவதாக பார்த்திருக்கின்றோம். ஆனால் 'செளகார்பேட்டை' படத்தில் பட்டப்பகலில் பேய் வருவதாக காட்டியிருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் வடிவுடையான் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ரொமான்ஸ் கேரக்டரிலும், லட்சுமிராய் கிளாமர் ரோலிலும் நடித்துள்ளதாக கூறிய வடிவுடையான், இந்த படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், 15 நிமிடங்கள் இடம்பெறக்கூடிய கிளைமாக்ஸில் 50 பேய்கள் ஆடியன்ஸ்களை மிரட்ட காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்த், லட்சுமிராய், சரவணன், சுமன், வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோபாலா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.