close
Choose your channels

ஜெயலலிதாவுக்கு பின் நீங்கள் தான்: நடிகர் சித்தார்த் டுவிட்டுக்கு ஸ்டாலின் பதில்

Monday, May 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதாவுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என நடிகர் சித்தார்த் பதிவு செய்த ட்விட்டிற்கு முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் பெயர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக அடிபடுகிறது தெரிந்ததே. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சித்தார்த் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ஜெயலலிதா அவர்களுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் நீங்கள்தான் என்றும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நீங்கள் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், எங்களுடைய எதிர்பார்ப்பை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள முக ஸ்டாலின் அவர்கள் சமூக நீதி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் கூடிய தமிழகம் இனி இருக்கும் என்றும், தமிழ் நாட்டில் நல்லாட்சி நடப்பதோடு நமது மாநிலம் முன்மாதிரி மாநிலமாக இருக்குமென்றும், மிகப் பெரிய உயரத்திற்கு செல்லும் என்று உறுதி கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.