close
Choose your channels

சூர்யா-பாலா படத்தில் இணைகிறாரா சுதா கொங்கரா? ஆச்சரிய தகவல்

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய ’இறுதிச்சுற்று’ மற்றும் ’சூரரைப்போற்று’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பதும் இதனை அடுத்து ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் தற்போது அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் சுதா கொங்கரா இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூர்யா - பாலா இணையும் படத்தில் சுதா கொங்கரா நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிய இருப்பதாகவும் இந்த பணியை முடித்துவிட்டு தான் சுதா கொங்கரா ’சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக் பணிகளை கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சூர்யா மற்றும் பாலா இணையும் இந்த படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மையமாக கொண்ட படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவா போன்ற கடலோர பகுதிகளில் தான் அதிகம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.