close
Choose your channels

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணியா இவர்? ஆச்சரிய புகைப்படங்கள்!

Saturday, May 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெரிய திரை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் போல செய்தி வாசிப்பாளர்களுக்கும் என தனியாக ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஷோபனா ரவி, ஃபாத்திமா பாபு முதல் இன்று தனியார் சேனல்களில் செய்தி வாசிப்பாளர்களாக இருக்கும் பலர் பொது மக்களின் மனதைக் கவர்ந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் கண்மணிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் அவரது சமூக வலைதளங்களை குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடிப்பிடித்து ஃபாலோ செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் டிவியில் செய்தி வாசிக்கும் கண்மணியை சேலையில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான மாடர்ன் உடைகளில் கொடுத்த போஸ்களின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டதை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணியா இவர்? என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகிறார்கள். அசத்தலாக இருக்கும் கண்மணியின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.