close
Choose your channels

விஷாலின் அடுத்த படத்தில் சன்னிலியோன்?

Friday, November 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கும் இந்த படத்தில் பார்த்திபன், கே.எஸ்ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவார் என தெரிகிறது.

சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை வடிவுடையான இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.