close
Choose your channels

இரண்டாவது படமே ரஜினி படம்: 'தலைவர் 170' படத்தின் இயக்குனர் இவர்தான்! 

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ’டான்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான ’டான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இந்த நிலையில் சிபிசக்கரவர்த்தி இயக்கும் அடுத்தபடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 170’ என்று கூறப்படுகிறது. இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சிபி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.