close
Choose your channels

லேடி சூப்பர் ஸ்டாரின் 'அறம்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

Tuesday, November 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் அளித்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் மிகப்பொருத்தம் என்பது அவரது 'அறம்' படம் நிரூபித்து வருகிறது. பத்திரிகைகள், விமர்சகர்கள், சமூக ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன. இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம் என்று அனைவரும் கருத்து கூறி வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.

தமிழ்சினிமா மார்தட்டி பெருமை கொள்ள வேண்டிய அசாதாரண படைப்பு என்றும், இந்த படம் மதிப்பெண் எல்லைக்கு அப்பாற்பட்ட மிக "ஆழமான" படம் என்று சொல்வதை விட பாடம் என்று சொல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் 'அறம்' படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் பாராட்டு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் என்றும், இந்த பாராட்டு எங்களை மேலும் கடின உழைப்புக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் 'அறம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.