close
Choose your channels

ஆச்சரியம் மற்றும் மாயமந்திரம்: 'லால் சலாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஐஸ்வர்யா ரஜினி..!

Wednesday, July 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் அவர் ’உங்களை வைத்து படம் எடுப்பது ஒரு அதிசயம், நீங்கள் ஒரு மாய மந்திரம் அப்பா என்று தெரிவித்து படக்குழுவினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அந்த கேரக்டரின் கெட்டப்புடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படத்தையும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.