close
Choose your channels

சென்னையில் 'கபாலி' படம் பார்த்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி அமெரிக்கா, கனடா உள்பட உலகின் பல நாடுகளில் பெருவாரியான வசூலை குவித்துள்ளது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.500 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் முதல் கோலிவுட் விஐபிக்கள் முதல் அனைவரையும் கவர்ந்த 'கபாலி' திரைப்படத்தை உலக அளவில் பிரபலமானவர்களும் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பதை அவ்வபோது வெளிவரும் செய்தியை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் தமிழ்நாடு பிரிமியர் லீக்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் வந்த உலகப்புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹெய்டன் இன்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் 'கபாலி' படத்தை ரசித்து பார்த்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.