close
Choose your channels

ரஜினியால் தூக்கத்தை தொலைத்த 'மாநகரம்' இயக்குனர்

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகிற்கு புதியதாக வரும் திறமைசாலிகளை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாதவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளிவந்த 'ஜோக்கர்' படத்தை மனதார பாராட்டிய தலைவர் ரஜினி, தற்போது அவருடைய இன்னொரு தயாரிப்பான 'மாநகரம்' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த், "கண்ணா ஹா ஹா" !!! படம் பார்த்தேன் கலக்கிட்டிங்க , சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்து தான் படத்தை பார்த்தேன்.. கலக்குங்க , கலக்குங்க என்று கூறியுள்ளார். ரஜினியின் பாராட்டு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த இயக்குனர் லோகேஷ், 'ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டால் கிடைத்த மகிழ்ச்சியில் இரவு முழுவதும் தூங்கவில்லை' என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மற்றும் படக்குழுவினர்களையும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.