close
Choose your channels

பிரபுவின் 200வது படத்தில் சூர்யா

Saturday, May 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 200 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை செய்த நிலையில் தற்போது அவரது மகன் பிரபுவும் 200 படங்களை முடித்துள்ளார். ஆம் இன்று இசை வெளியீடு நடந்து வரும் 'மீன் குழம்பும் மண் பானையும்' படம் பிரபு நடித்த 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடந்துள்ள நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகன் காளிதாஸ் ஜெயராம், நாயகி ஆஷ்னா ஜாவேரி, மதன்கார்க்கி உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த படத்தின் 4 பாடல்களையும் மதன்கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.