close
Choose your channels

'சூர்யா 42' படம் உருவாகும் டெக்னாலஜி: மோஷன் போஸ்டரில் அசத்தல் தகவல்

Friday, September 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டரில் ’சூர்யா 42’ திரைப்படம் 3D டெக்னாலஜி எடுக்க இருப்பதாகவும் 10 மொழிகளில் உருவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய கேரக்டர்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பும் மோஷன் போஸ்டர் இந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சூர்யா42’ திரைப்படம் தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத அளவில் பிரம்மாண்டமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி நடித்திருக்கும் இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.