close
Choose your channels

சூர்யா-ஜோதிகா, விஜய்சேதுபதி-ஜெஸ்ஸி: விக்கி-நயனின் கலக்கல் திருமண புகைப்படங்கள்!

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாக இருப்பதை எடுத்து திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை என்பதும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் மட்டும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற தகவல் கூட முழுமையாக வெளியாகவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்டோர் நயன்-விக்கி தம்பதிகளை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியானதை பார்த்தோம். தற்போது சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.