close
Choose your channels

இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்கின்றேன்: தமன்னாவின் நெகிழ்ச்சியான பதிவு..!

Friday, July 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னாவின் ’காவாலா’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியதை அடுத்து இந்த பாடலை ஹிட் ஆக்கிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என சற்றுமுன் நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னால் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ இந்த பாடல் வெளியானது. இந்த பாடலை ஒரு கோடிக்கும் அதிகமான பேர் பார்த்து உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என்று வயது பேதம் இல்லாமல் தங்களது சமூக வலைதளத்தில் ’காவாலா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்து வருகின்றனர்.இந்த வீடியோவை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமன்னா சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’காவாலா’ பாடலுக்கு கிடைத்த அளவற்ற அன்பை பார்த்து எனக்கு நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சி உள்ளது. என் மனம் நிரம்பி வழிகிறது. திரைப்படங்களில் நான் செய்யும் பணிக்காக இவ்வளவு பெரிய அன்பு கிடைத்திருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனவே என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நான் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.