close
Choose your channels

சொல்ல வார்த்தையே இல்லை.. தாஜ்மஹால் முன் யோகா செய்யும் தமிழ் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட நடிகை தாஜ்மஹால் முன் யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ’சொல்ல வார்த்தையே இல்லை’ என்பது உட்பட ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அதன் பிறகு ’கதாநாயகன்’ ’ஏமாளி’ ’நாகேஷ் திரையரங்கம்’ ’சுட்டு பிடிக்க உத்தரவு’ ’நாடோடிகள் 2’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு படம் உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவிக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாஜ்மஹால் அருகே அவர் தரையில் உட்கார்ந்து யோகா செய்யும் புகைப்படங்கள் உள்பட அழகிய புகைப்படங்களை பதிவு செய்ய நிலையில் இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.