close
Choose your channels

உதயநிதியுடன் இறகுப்பந்து விளையாடிய முதல்வர் ஸ்டாலின்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் இறகு பந்து விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்துவைத்தார். பின்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மைதானத்தில் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். அவருடன் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் எ.வ.வேலு உள்பட பலரும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விளையாட்டு துறையில் ஈடுபாடு உள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குழந்தை போல மாறி இறகுப்பந்து விளையாடும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.