close
Choose your channels

திரையரங்குகள் மூடப்படும் என தகவல்: பொங்கல் ரிலீஸ் என்ன ஆகும்?

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்து வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன் செய்யப்படும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள 8 திரைப்படங்களின் நிலை என்ன என்ற கேள்வியை எழும்பியுள்ளது. இதனால் திரையுலக வட்டாரங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.