close
Choose your channels

விபத்தில் சிக்கிய டார்சன் நடிகர்… மனைவியுடன் பலியான சோகம்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் 1989 ஆம் ஆண்டு வெளியான பிரபல தொலைக்காட்சி திரைப்படம் டார்சன். இதில் டார்சனாக நடித்து புகழ்பெற்றவர் ஜோ லாரா. அதற்குப்பின் பல சிறந்தப் படைப்புகளை கொடுத்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று இசைத் துறையில் செயல்பட்டு வந்தார்.

இவர் நேற்று முன்தினம் தனது மனைவி க்வென் கிளாராஷாம்ப்ளின் உடன் அமெரிக்காவின் டென்னசி தெர்போர் பிரிட்ஸ் உள் விமான நிலையத்தில் இருந்து பாம்பீச் விமான நிலையத்திற்குச் செல்வதற்காக சிறிய ரக விமானத்தில் பயணித்து இருக்கிறார். இந்த விமானம் பெர்சி பிராஸ்ட் எனும் இடத்திற்கு செல்லும்போது விபத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதனால் அந்த விமானத்தில் பயணித்த நடிகர் ஜோ லாரா, அவரது மனைவி க்வென் கிளாராஷாம்ப்ளின் ஆகிய இருவரும் உயிரிழந்து உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து உள்ளூர் வாசிகள், ஓட்டுநர் என மேலும் 5 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்ற தகவல் எதுவும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ஜோ லாராவின் உயிரிழப்புக்கு அவரது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.