close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்?

Sunday, August 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2ஆம் தேதி முதல் பல்கேரியா நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இவ்வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க விஷ்ணுவர்தன் உள்பட ஒருசில முன்னணி இயக்குனர்கள் தயாராக இருக்கும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது ஷங்கரும் இணைந்துள்ளார்.
ஷங்கரிடம் உள்ள ஒரு ஆக்சன் த்ரில் கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பார் என கருதி அவரது தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ''2.0''படத்திற்கு பின்னர் ஷங்கர், அஜித்துடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.