close
Choose your channels

'விவேகம்' படத்திற்காக இயக்குனர் சிவா எழுதிய பாடல் இதுதான்

Friday, July 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களை அதிர வைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. டீசருக்கு பின்னர் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டிரைலர் விரைவில் வெளிவரவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'தல விடுதல' என்ற தொடங்கும் சிங்கிள் பாடல் ஒன்றை வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் சிவா எழுத அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 'விவேகம்' படத்தின் டீசர் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் டிசர் வெளியாகும் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.