close
Choose your channels

'தலைவி' ரிலீஸ் எப்போது? கங்கனா ரனாவத் தகவல்!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணவத் நடித்துள்ள திரைப்படம் ’தலைவி’. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஆர்எம் வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனி, கருணாநிதி கேரக்டரில் நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது தெரியாததால் ’தலைவி’ படம் ரிலீஸ் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில ஊடகங்களில் ’தலைவி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக போவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக போவதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ’தலைவி’ திரைப்படம் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், ’தலைவி’ ரிலீஸ் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இந்தியா முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு ’தலைவி’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.