close
Choose your channels

'தளபதி 65' குறித்த அட்டகாசமான தகவல்!

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த படத்திற்கு பாஜகவினர் மற்றும் வருமான வரித்துறையினர் இலவச விளம்பரம் அளித்து படத்திற்கு உச்சகட்ட புரமோஷன் செய்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், இந்த படம் சூப்பர் ஹிட்டாவது உறுதி என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் ஒரு சில தகவல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ’தளபதி 65’ படத்தை சுதா கொங்கார இயக்குவார் என்றும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘தளபதி 65’ படத்தை தயாரிப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடவும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொஙகல் என்றாலே நீண்ட விடுமுறை உள்ள பண்டிகை தினம் என்பதால் ‘தளபதி 65’ படத்தின் வசூல் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.