close
Choose your channels

'தளபதி 67' திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த பிரபல நடிகரின் தந்தையா?

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு திரையுல்கினர் தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வம்சி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட விட்டதாகவே கருதப்படுகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 67’ திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது. விஜய்யின் 67வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லுசிரிஷ் ஆகியோர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ள நிலையில் ’தளபதி 67’ திரைப்படத்தையும் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிப்பாளர் தயாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.