close
Choose your channels

'விக்ரம் 3' படத்தில் தளபதி விஜய்யா? கமல் அளித்த சூப்பர் பதில்!

Sunday, May 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது இந்தா விழாவில் கலந்து கொண்ட ஒருவர், ‘விக்ரம்’ படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், ‘விக்ரம் 3’ படத்திற்காக ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறிய கமல், ஆனால் அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்கவும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று சூப்பர் பதிலை அளித்தார்.

ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமலின் இந்த பதிலால் விரைவில் கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.