close
Choose your channels

ரொம்ப ஈசிதான்.. விருப்பப்பட்டா உடனே சேர்ந்துடுங்க.. தளபதி விஜய் வெளியிட்ட வீடியோ..!

Friday, March 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களுக்கு முன் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அந்த அரசியல் கட்சியின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை அவரது கட்சி தொண்டர்கள் செய்து வருகின்றனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் நபராக விஜய் அந்த செயலியின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அவர் ’இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை, நான் சேர்ந்து விட்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஒரு அடிப்படை சமூகநீதி கொள்கையை பின்பற்றி வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சேவை செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியினுடைய உறுதி மொழியை படியுங்கள், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால், இந்த செயலி மூலம் எங்கள் கட்சியின் உறுப்பினராகுங்கள். இதில் உறுப்பினர் ஆவது ரொம்ப ஈசி தான், நன்றி என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.