close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவரா? அதிரடி தகவல்!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் என்பதும் அவரது நடிப்பில் வெளியான ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது அயலான், டான் மற்றும் சிங்கப்பாதை ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று இசையமைப்பாளர் தமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய போது நன்றி தெரிவித்த தமன், ‘பின்றோம் தட்றோம் தூக்குறோம்’ என்று கூறி #SK21 என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதிலிருந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.