close
Choose your channels

கமல்ஹாசனுக்கு இதுதான் முதல்முறை: 'விக்ரம்' செய்த சாதனை!

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை கொண்டாடின என்பதும் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகினர்களும், வட இந்திய திரையுலகினர்களும் கமல்ஹாசனுக்கும் படக்குழுவினர்களுக்கு பாராட்டுகளை குவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இன்னொரு பக்கம் ‘விக்ரம்’ படத்தின் வசூல் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதை பார்த்து வருகிறோம். ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 40 கோடி ரூபாய் வசூலானது என்பதும், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஆனது என்பதும் டிரேடிங் வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி தெரியவந்தது.

அதன்பின் 8 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை தாண்டிய இந்தப் படத்தின் வசூல் தற்போது இரண்டு வார முடிவில் 300 கோடி ரூபாய் என்ற அளவில் வசூலை தொட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் ஒன்று 300 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.