close
Choose your channels

தனுஷின் 'பட்டாஸ்' பட அட்டகாசமான அறிவிப்பு இதுதான்!

Saturday, November 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்று இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அறிவிப்பு செய்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அந்த அட்டகாசமான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி ‘பட்டாஸ்; திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘சில்புரோ’ என்ற பாடல் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விவேக்-மெர்வின் இசையில் தனுஷே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.