close
Choose your channels

பிக்பாஸ் டைட்டிலை முகின் வெல்ல ஒரே காரணம்!

Sunday, October 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும், தனியார் இணையதளங்களும் எடுத்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் முகின் தான் வெற்றியாளர் என முடிவுகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் முகினின் வெற்றிக்கு ஒரே ஒரு காரணம் தான் முக்கியமாக கருதப்படுகிறது. கவின் வெளியேறியதும் அவரது ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு ஆதரவு கொடுத்ததால் லாஸ்லியா பிக்பாஸ் டைட்டிலை எளிதில் வென்றுவிடுவார் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்கள் வாக்கெடுப்பிலும் லாஸ்லியாவின் கையே ஓங்கியிருந்தது.

ஆனால் திடீரென ஒரே ஒரு பாடல், முடிவை தலைகீழாக மாற்றிவிட்டது. கடந்த புதன்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகின் பாடிய ‘நீதான்... நீதான்... என்ற பாடல் அனைவர் மனதையும் கவர்ந்தது. முகினின் ஏற்ற இறக்க உணர்ச்சிகரமான குரலில் பாடப்பட்ட அந்த பாடலுக்கு எல்லோரும் அடிமையாகிவிட்டனர். குறிப்பாக பெண்கள் இந்த பாடலுக்கு வெறித்தனமான ரசிகைகள் ஆகிவிட்டனர். இதனையடுத்து வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் முகினுக்கு ஓட்டுக்கள் குவிந்ததாகவும், இதனையடுத்தே அவர் வெற்றியாளர் என்ற இலக்கை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இன்னும் ஒருசில மணிநேரங்களில் வெற்றியாளர் குறித்த முடிவை கமல்ஹாசன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை காத்திருப்ப்போம்.

முகினின் வெற்றிக்கு காரணமான அந்த பாடல் இதுதான்:

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..

சத்தியமா, நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

கிறுக்கி உன் கிறுக்கல்
எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான்
உன்மேல காட்டிப்புட்டேன்

இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடுதான் கை கோர்க்க

என்ன மறந்த .. என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள ..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.