close
Choose your channels

6 வருட சாதனையை முறியடித்தது 'தெறி'

Monday, April 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வசூலிலும் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.

அந்த வகையில் பிரிட்டனில் கடந்த ஆறு வருடங்களாக இருந்து வந்த வசூல் சாதனை ஒன்றை 'தெறி' தற்போது முறியடித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் வாரஇறுதி நாட்களில் £277,918 வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை கடந்த ஆறு வருடங்களாக எந்த திரைப்படமும் முறியடிக்காத நிலையில் 'தெறி' திரைப்படம் £280,696 வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.'

தற்போது விஜய்யின் 'தெறி' திரைப்படம்தான் பிரிட்டனில் நம்பர் ஒன் வசூல் செய்த தமிழ் திரைப்படமாக திகழ்கிறது. இந்த சாதனை இன்னும் பல நாடுகளிலும் 'தெறி' நிகழ்த்த வேண்டும் என்றே விஜய் ரசிகர்கள் விரும்புகின்றனர். அவர்களுடை விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.